Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Friday, 31 July 2009

கவிதை கூலம் 7

பெண்ணே உன்னால்...

கிறுக்கல்கள் கூட கவிதையாகிறது
உன்னால் இயற்றப்பட்டதினால்...
களிமண் கூட கவிதையாகிறது
உன்னால் படைக்கப்பட்டதினால்...
பெண்ணே...
இப்பொழுது புரிகின்றது,
இந்தக் கவிஞனும் பித்தனானது...
உன்னால் வஞ்சிக்கப்பட்டதினால் தானோ?!?!

Wednesday, 29 July 2009

கவிதை கூலம் 6

என் ஆசைகளின் நேரம்



மழையாய் இருக்க ஆசை தான்,
உன் இதழ் மேல் விழும்
மழை துளிகளாய்...
காற்றாக இருக்க ஆசை தான்,
உன் இடை கொஞ்சும்
இனிய தென்றலாய்...
கவிதையாக இருக்க ஆசை தான்,
உன் எழில் பற்றி இயற்றப்பட்ட
கவித் துளிகளாய்...
காதலாக இருக்க ஆசை தான்,
உன் உள்ளமெல்லாம் நிரம்பி வழியும்
உயிர்க் காதலனாய்...

Thursday, 9 July 2009

கவிதை கூலம் 5

செல்லமடி நீ எனக்கு



பார்த்துப் பழகின கண்கள் தான்
பேசிப் பழகின இதழ்கள் தான்
தொட்டு அணைத்த உடல் தான்
கூடிச் சிரித்த அதே சிரிப்புத் தான்...
ஆனால்,
என்றும் சலிக்காத
செல்லமடி நீ எனக்கு...

Tuesday, 7 July 2009

கவிதை கூலம் 4

என் காதல்



காத்திருந்த காலங்கள்
கடந்து விட்டதடி
சேர்த்து வைத்திருந்த நினைவுகள்
சிதைந்து விட்டதடி
எழுதி வைத்த காதல் வரிகள்
மறந்து விட்டதடி
தொலைத்த என் இதயம் கூட
கந்தலாய் கிடைத்து விட்டதடி
ஆனால்
பூத்த அந்த காதல் மட்டும்
முள்ளாய் உருத்துதடி
என் இதயத்தில் இன்னமும்...

கவிதை கூலம் 3

அழகே என்னை கொல்லடி...



துடித்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் இதயத்தை...
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் விழிகளை...
நினைத்துக் கொண்டிருக்கும் போதே
பறித்து விட்டாய்
என் எண்ணங்களை...
மீதம் இருப்பது என் உயிர்தானடி
அதையும் பறித்துக் கொள்!
சிரித்தபடி போய்
கோள் சொல்கிறேன் கடவுளிடம்,
அவன் அழகிய படைப்பின் விளைவுகள் பற்றி...

Sunday, 5 July 2009

கவிதை கூலம் 2

காலம் கடந்து செல்வோம்...



கரம் பிடித்து அழைத்து செல்ல நானிருக்கிறேன்,
காலம் கடந்து செல்வோம் வா...
ஷாஜகான் கட்டுவதாய் இருந்த
இரண்டாம் காதல் சின்னமாம்
கருப்பு தாஜ்மகாலை கட்டிட
உதவி செய்திடுவோம்...
அம்பிகாபதியும் அமராவதியும்
அமைதியாய் வாழ
வழி புனைவோம்...
லைலாவும் மஜ்னுவும்
அன்புடன் இல்லறம் ஏற
வகை செய்வோம்...
அப்படியேனும் இக்காலத்தில்
காதல்
தோல்வி நிலைகள் கடந்து
மதம், பொருளாதார வேறுபாடுகள் மறைந்து
வெற்றி வகை சூடட்டும்,
வேற்றுமைகள் மறையட்டும்,
புதிய அன்பு உலகம் மலரட்டும்...
வா அன்பே, காலம் கடந்து செல்வோம்
புதிய காதல் சரித்திரம் படைப்போம்...